1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2017 (01:00 IST)

உலகின் மிகச்சிறிய மொபைல் போன் அறிமுகம்: இரண்டு நாணயங்கள் அளவே இருப்பதால் ஆச்சரியம்

கடந்த சில மாதங்களாக பெரிய சைஸ் போன் வைத்து கொள்வதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். வீடியோ சேட்டிங் போதும், திரைப்படங்கள் உள்பட வீடியோ பார்க்கும்வகையில் பெரிய ஸ்க்ரீன் சைஸ் போன்கள் விரும்பி வாங்கப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் ஜான்கோ நிறுவனம் உலகின் மிகச்சிறிய மொபைல் போனை அறிவித்துள்ளது. இந்த போன் 1.9 x 0.8 x 0.5 இன்ச் அள்வே இருக்கின்றது. அதாவது இந்த இரண்டு நாணயங்கள் அளவில் மட்டும் உள்ளது என்பதும் இந்த போனின் ஸ்க்ரீன் சைஸ் வெறும் 0.49 இன்ச் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த போனில் அழைப்புகள் மற்றும் மெசேஜ் ஆகியவற்றுக்காக மட்டும் பயன்படுத்தப்படும். 200-mAh பேட்டரியை கொண்ட இந்த போன் 180 நிமிடங்கள் தொடர்ந்து பேசும் வகையில் பேட்டரியின் திறன் இருக்கும். இந்த போனின் எடை வெறும் 13 கிராம் மட்டுமே. மினி கீபேட் கொண்ட இந்த போன் 2Gயில் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.