வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2017 (05:37 IST)

ஜெர்மன் அதிபராக 4வது முறையாக வெற்றி பெற்றார் ஏஞ்சலா மெர்க்கல்

ஜெர்மன் அதிபருக்கான தேர்தல் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்நாட்டில் நடந்து வருகிறது. அந்த வகையில் 2013ஆம் ஆண்டுக்கு பின்னர் நேற்று மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெற்றது.



 
 
இந்த தேர்தலில் ஏழு பேர் போட்டியிட்ட போதிலும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் போட்டியிட்ட அதிபர் ஏஞ்சலா மெர்கலுக்கும், சமூக ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட மார்டின் ஷூல்ஸ்சுக்கும் தான் போட்டி இருந்தது.
 
இந்த நிலையில் ஏஞ்சலா மெர்கல் 33.2 சதவீதம் வாக்குகள் பெற்று சாதனை வெற்றி பெற்றார். சமூக ஜனநாயக கட்சி 20.8 சதவீதம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது, இந்த வெற்றியால் ஏஞ்சலா மெர்க்கல் நான்காவது முறையாக ஜெர்மன் அதிபராக பதவியேற்கிறார்.  அதிபர் ஏஞ்சலாவின் வெற்றியை ஜெர்மன் நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.