செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2017 (14:01 IST)

பேய் மற்றும் தேவதையாக மாறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் - ப்ரொமோ

நூறு நாட்களை கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடைய இருக்கிறது. தற்போது 6  போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், கொடுக்கப்படும் டாஸ்க்குகளும் கடுமையானதாக உள்ளது.

 
 
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிநேகன் முதலிடத்தில் உள்ளார். இதனை தொடர்ந்து மற்ற  போட்டியாளர்கள் இந்த வார எவிக்‌ஷன் பட்டியலில் நேரடியாக தேர்வு செய்யப் பட்டுள்ளதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார்.  இதனால் போட்டியாளர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் கடுமையாக போராடி  வருகின்றனர்.
 
இந்நிலையில் தற்போது வந்துள்ள ப்ரொமோவில் டாஸ்கின்படி ஆரவ், பிந்து, ஹரிஷ் ஆகியோர் பேயாகவும், சுஜா, சிநேகன், கணேஷ் ஆகியோர் தேவதையாகவும் உடை அணிந்துள்ளனர். இந்நிலையில் தேவதையாக உள்ள சுஜா, ஆரவ்விடம் நான் தேவை நீ பேய் என்று கூறுகிறார். இதனை கேட்ட ஆரவ் சத்தியமாக இது உனக்கு பொருந்தவே இல்லை என்று கூறுகிறார். பதில் கூறிய சுஜா ஏன் பிடிக்கவில்லையா? என்று கேட்க, ஆரவ் தலையணையை தூக்கி சுஜா மீது வீசுகிறார்.
 
அப்பா... முடியலைடா சாமி... என்பதுபோல் ஹரிஷின் முகப்பாவனை இருந்தது. இந்த நூறு நாட்கள் முடிவதற்க்குள் இன்னும் என்னென்ன டாஸ்கெல்லாம் கொடுக்கப் போகிறாரோ பிக்பாஸ்.