1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2017 (12:09 IST)

தேவதையை குழந்தையாக பெற்றெடுத்தாரா கொல்கத்தா பெண்?

உலகின் பல பகுதிகளில் அவ்வப்போது வித்தியாசமான குழந்தைகள் பிறந்து வரும் நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த கூலி வேலை பார்க்கும் பெண் ஒருவருக்கு தேவதை போன்ற குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
 
பொதுவாக தேவதைகளுக்கு கால் இருக்காது என்றும் அவர்கள் பறக்கும் சக்தியுடையவர்கள் என்றும் படித்திருக்கின்றோம். அதேபோல் கொல்கத்தாவை சேர்ந்த மஸ்குரா பிபி என்ற 23வயது பெண்ணுக்கு நேற்று கால்கள் இல்லாமல் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இடுப்புக்கு மேலே நார்மலாகவும், இடுப்புக்கு கீழே அந்த குழந்தை என்ன பாலினம் என்பதை கூட கண்டுபிடிக்க முடியாதை வகையில் இந்த குழந்தை உள்ளது.
 
இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் இந்த குழந்தையை பார்க்க அந்த பகுதியை சேர்ந்த பலர் மருத்துவமனையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். அனைவரும் இது தேவதை என்றே கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஆனால் கர்ப்பகாலத்தில் சரியான ஊட்டச்சத்து இன்றி தாய் இருந்ததால் குழந்தை இவ்வாறு பிறந்துள்ளதாகவும், இந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து நார்மலாக்க முடியுமா? என்று ஆலோசனை செய்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.