வாட்ஸ்அப் மெசேஜை இனி ஷெட்யூல் செய்தும் அனுப்பலாம்.. 10 நிமிடம் முதல் 2 வாரங்கள் வரை ஷெட்யூல் செய்ய வசதி...
வாட்ஸ்அப் செயலி தனது ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மெசேஜ்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பும் புதிய வசதியை சோதித்து வருகிறது. இதன் மூலம் பயனர்கள் தனி நபர் சேட்கள் அல்லது குழு சேட்களில் 10 நிமிடங்கள் முதல் இரண்டு வாரங்கள் வரை முன்கூட்டியே தேதி மற்றும் நேரத்தை தேர்ந்தெடுத்து மெசேஜ்களை ஷெட்யூல் செய்து கொள்ள முடியும்.
பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண நாள் நினைவூட்டல்கள் மற்றும் அலுவலக குறிப்புகளை கடைசி நேர பரபரப்பின்றி அனுப்ப இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த புதிய வசதியின் கீழ், பயனர்கள் மெசேஜை டைப் செய்து 'Send' பொத்தானை அழுத்தி பிடிப்பதன் மூலம் அனுப்ப வேண்டிய நேரத்தைத் தேர்வு செய்யலாம்.
மேலும், கைப்பேசியில் இணையதள இணைப்பு இல்லாத நிலையிலும் குறிப்பிட்ட நேரத்தில் மெசேஜ் தானாகவே சென்று சேரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அனுப்பப்படுவதற்கு முன்பாக அந்த மெசேஜ்களைப் பார்வையிடவும் அல்லது ரத்து செய்யவும் பிரத்யேக நிர்வாப் பிரிவு வழங்கப்படவுள்ளது.
தற்போது சோதனை கட்டத்தில் இருக்கும் இந்த அம்சம், விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

