புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (13:27 IST)

இது நெட்வொர்க் இல்லை! நெட் இல்லாத வொர்க்!: வோடஃபோன் இழுத்து மூடப்படுகிறதா??

வோடஃபோன் சேவைகள் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் முடங்கி வருவதால் வோடஃபோன் நிறுவனம் இழுத்து மூடப்பட்டு விட்டதாக தகவல்கள் உலா வருகின்றன.

இந்தியாவில் செல்போன் சேவையில் முன்னிலையில் உள்ள நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் வோடஃபோன். சமீப காலமாக இந்தியாவின் பல பகுதிகளில் வோடஃபோன் சிம் பயன்படுத்துபவர்களுக்கு சிக்னல் கிடைக்கவில்லை, இணைய சேவையும் சரியாக கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து பலர் கஸ்டமர் கேர் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். சில மணி நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆனால் கடந்த 5 நாட்களாகவே பல பகுதிகளில் வோடஃபோன் சேவைகள் முற்றிலும் முடங்கிவிட்டதாக பயனாளர்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். ”இது நெட்வொர்க் இல்லை! நெட் இல்லாத வொர்க்” என்று கிண்டல் செய்து பலர் பதிவிட்டுள்ளனர்.

பல இடங்களில் கஸ்டமர் கேர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று மக்கள் கூறியுள்ளார்கள். இதனால் வோடஃபோன் நிறுவனம் மூடப்பட்டுவிட்டதாக பல்வேறு வதந்திகள் உலா வர தொடங்கியுள்ளன. இதுகுறித்து இன்னமும் வோடஃபோன் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் வோடஃபோன் அதிகாரிகள் சிலர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சிக்னல் பிரச்சினை எழுந்துள்ளதாகவும், விரைவில் இந்த பிரச்சினை சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.