பெண்கள் ஹாக்கி: இந்திய அணி அபார வெற்றி!

sivalingam| Last Modified ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (07:48 IST)
இந்திய பெண்கள் ஹாக்கி அணி மற்றும் பிரிட்டன் பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரிட்டனை இந்தியா
வீழ்த்தியது


பிரிட்டன் சென்றுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, அந்நாட்டு பெண்கள் ஹாக்கி அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது


முதல் போட்டி மார்லோவில் நடந்த நிலையில் முதல் பாதியில் இரு அணியினரும் கோல் ஏதும் அடிக்கவில்லை. ஆனால் போட்டியின் 46 வது நிமிடத்தில் பிரிட்டனின் எமிலி டிபிராண்டு என்ற வீராங்கனை ஒரு கோல் அடிக்க, இந்திய அணி 0-1 என கணக்கில் பின்தங்கியது.


ஆனால் போட்டியின் கடைசி நிமிடத்தில் இந்திய வீராங்கனை ஷர்மிளா, ஒரு கோலும், ஆட்டம் முடிய 48 வினாடிகள் இருந்த போது பெனால்டி கார்னரில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் ஒரு கோலும் அடித்ததால் இந்திய அணி வெற்றி பெற்றது


இதனையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :