தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்சி F55..! அதிரடி விலை.!!
- இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.
- மக்கள் அதிகம் விரும்பும் கருப்பு நிற பைக் - அப்பாச்சி ஆர்டிஆர் 160 வாகனத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்த டிவிஎஸ் நிறுவனம்...
- ஃபுல் ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் அசத்தலான ஆப்ஷனில் வெளியான Realme GT 6T! ஆப்ஷன்ஸ் எப்படி இருக்கு?
- விவோ Y200 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்? விலை என்ன?
டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் கார் அறிமுக விழா!
கார் பிரியர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்,கார் அறிமுக விழா கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில் நடைபெற்றது.
காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த புதிய டைசர் காரில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் கூடிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகள் உள்ளன.
பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற குறிப்பிடத்தக்க வசதிகள் இடம்பெற்றுள்ளன.
செயல்திறனை பொறுத்தவரையில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரில், பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன..இப்படி பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஐந்து வேரியண்டுகளுடன் அறிமுகமாகி உள்ள அர்பன் க்ரூசர் டைசர் கார் விற்பனைக்கான முன்பதிவுகள் நடைபெற்று, வருவதாக விற்பனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
