திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 29 மே 2024 (10:15 IST)

ஆபாசமாக கேள்வி கேட்டதால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. பெண் உள்பட யூடியூப் நிர்வாகிகள் கைது..!

யூடியூப் பேட்டியின்போது ஆபாசமாக கேள்வியை கேட்டதால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் தற்கொலை முயற்சி செய்ய செய்த நிலையில் பெண் உள்பட யூடியூப் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னையில் வீரா டாக்ஸ் டபுள் எக்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் நிர்வாகிகள் 23 வயது இளம்பெண்ணிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு அதை அனுமதி இன்றி தங்களது யூடியூப் சேனலில் பதிவு செய்ததாக தெரிகிறது.
 
இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த இளம் பெண் தற்கொலை முயற்சி செய்த நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் வீரா டாக்ஸ் டபுள் எக்ஸ் என்ற யூடியூப் சேனல் தொகுப்பாளர் சுவேதா, ஒளிப்பதிவாளர், யூடியூப் உரிமையாளர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
ஆபாசமான கேள்வியை சுவேதா கேட்டதும் அதை யூடியூபில் போடக்கூடாது என அந்த பெண் கூறியதையும் மீறி வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran