1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 28 மே 2024 (16:59 IST)

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்சி F55..! அதிரடி விலை.!!

Samsung
கேலக்சி ‘எஃப்’ வரிசையில் எஃப்55 ஸ்மார்ட் போனை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் ஸ்மார்ட்போன் தயாரிப்புகளாக சாம்சங் நிறுவனம் விளங்கி வருகிறது. ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள இந்நிறுவனம்  5ஜி ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறது.
 
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி F55 5ஜி அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
 
இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் நிலையில், தற்போது கேலக்சி ‘எஃப்’ வரிசையில் எஃப்55 ஸ்மார்ட் போனை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.26,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
 
போனின் சிறப்பு அம்சங்கள்:
 
6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 1 ப்ராசஸர் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது.
 
பின்பக்கத்தில் உள்ள பிரதான கேமரா 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
 
டைப்-சி யுஎஸ்பி போர்ட்
 
5,000mAh பேட்டரி
 
45 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
 
இந்த போனுடன் சார்ஜர் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.