வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (14:09 IST)

Sony IMX882 தொழில்நுட்ப கேமரா.. அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் வெளியாகும் Vivo T3 Pro 5G!

Vivo T3 Pro 5G

விவோ நிறுவனத்தின் புதிய அறிமுகமான Vivo T3 Pro 5G மாடலானது பட்ஜெட் விலையில் நிறைவான அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணி வகித்து வரும் நிறுவனங்களில் விவோ ப்ராண்டும் ஒன்று. தற்போது விழாக்காலங்கள் தொடங்கியுள்ள நிலையில் புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் விவோ தனது புதிய Vivo T3 Pro 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

 

Vivo T3 Pro 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

 
  • 6.77 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே
  • 2.63 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ப்ராசஸர்
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 7 ஜென்3 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்
  • 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 50 எம்பி Sony IMX882 + 8 எம்பி டூவல் ப்ரைமரி கேமரா
  • 16 எம்பி முன்பக்க செல்பி கேமரா
  • 5ஜி, ப்ளூடூத், வைஃபை, யூஎஸ்பி டைப்-சி
  • 5500 mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங்
 

இந்த Vivo T3 Pro 5G ஸ்மார்ட்போன் சாண்ட்ஸ்டோன் ஆரஞ்ச், எமரால்ட் க்ரீன் ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகிறது. இதன் 8ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை (வங்கி சலுகைகள் உட்பட) ரூ.21,999 ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.23,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த Vivo T3 Pro 5G ஸ்மார்ட்போன் முதல் விற்பனை செப்டம்பர் 3ம் தேதி முதல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K