செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 ஜூலை 2024 (16:02 IST)

மிலிட்டரி க்ரேட் Durability! பக்காவாக வெளியானது OPPO K12x 5G! - சிறப்பம்சங்கள், விலை விவரங்கள்!

OPPO K12x 5G

ஓப்போ நிறுவனத்தின் புதிய OPPO K12x 5G ஸ்மார்ட்போன் எளிதில் உடையாத மிலிட்டரி க்ரேட் Durability உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

இந்தியாவில் விழாக்கால விற்பனைகள் தொடங்க உள்ள நிலையில் பல முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஓப்போ நிறுவனம் தனது புதிய OPPO K12x 5G பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

 

OPPO K12x 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

  • 6.67 இன்ச் ஹெச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே
  • 2.4 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ப்ராசஸர்
  • மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 14
  • 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
  • 128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 1 டிபி வரை சப்போர்ட் செய்யும் மெமரி கார்டு ஸ்லாட்
  • 32 எம்பி + 2 எம்பி ப்ரைமரி டூவல் கேமரா
  • 8 எம்.பி முன்பக்க செல்பி கேமரா
  • 4ஜி, 5ஜி, வைஃபை, யுஎஸ்பி டைப் சி
  • 5100 mAh பேட்டரி, 45W பாஸ்ட் சார்ஜிங்
 

இந்த OPPO K12x 5G ஸ்மார்ட்போன் மிட்நைட் வயலெட், ப்ரீஸ் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களி கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K