வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஜூன் 2024 (11:27 IST)

கர்வ்ட் ஸ்கிரீன் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் OPPO F27 Pro Plus 5G!

OPPO F27 Pro Plus 5G
ஓப்போவின் புதிய ஸ்மார்ட்போன் OPPO F27 Pro Plus 5G நடுத்தரமான விலையில் பல சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது.



இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான மவுசு கூடியுள்ள நிலையில் நல்ல சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகளுடன் கட்டுப்படியாகும் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க பலரும் விரும்புகின்றனர். அப்படியானவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ஓப்போவின் புதிய OPPO F27 Pro Plus 5G ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

OPPO F27 Pro Plus 5G சிறப்பம்சங்கள்:
  • 6.7 இன்ச் அமொலெட் டிஸ்ப்ளே
  • 120HZ ரெப்ரெஷ் ரேட், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே
  • மீடியாடெக் டைமென்சிட்டி 7050 சிப்செட்
  • ஆக்டோகோர் ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14
  • 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • மெமரி கார்டு ஸ்லாட் வசதி இல்லை
  • 64 MP + 2 MP டூவல் ப்ரைமரி கேமரா
  • 8 MP முன்பக்க செல்பி கேமரா
  • 5G, USB Type C, Blutooth v5.3, Wifi
  • 5000 mAh பேட்டரி, 67 W SUPERWOOC சார்ஜிங்
  • ரிவர்ஸ் சார்ஜிங் வசதி உண்டு.
 
இந்த OPPO F27 Pro Plus 5G ஸ்மார்ட்போன் டஸ்க் பிங்க், மிட்நைட் நேவி ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.27,999 ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.29,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K