விலை உயர்ந்த ரெட்மி ஸ்மார்ட்போன்(ஸ்): எவ்வளவு தெரியுமா?

Sugapriya Prakash| Last Modified திங்கள், 19 ஜூலை 2021 (12:23 IST)
சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டின் இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை  உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இந்த ஆண்டு துவக்கத்தில் ரெட்மி 9 பவர் மற்றும் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் அறிமுகம் ஆனது. தற்போது இந்த ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 
 
அதன்படி ரெட்மி 9 பவர் ரூ. 500 அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ. 13,499 என்றும், ரெட்மி 9ஏ மாடல் விலை ரூ. 7,499-இல் இருந்து தற்போது ரூ. 7,799 என்றும் விற்பனை ஆகிறது. 
 
இந்தியா முழுக்க உயர்த்தப்பட்டு இருக்கும் இந்த விலை உயர்வு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :