1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (12:21 IST)

விலை உயர்ந்த விவோ ஸ்மார்ட்போன்(ஸ்): எவ்வளவு தெரியுமா?

விவோ நிறுவனம் தனது இரண்டு ஸ்மார்ட்போன்கள் மீதான விலையை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

 
ஆம், விவோ நிறுவனத்தின் Y20A மற்றும் Y20G ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 1000 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. விவோ Y20G ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல்கள் விலை முறையே 13,990 மற்றும் ரூ. 15,990 என மாறி இருக்கிறது.
 
இதே போல விவோ Y20A ஸ்மார்ட்போன் விலை ரூ. 11,990 என மாறி இருக்கிறது. புதிய விலை விவோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் தளங்களில் மாற்றப்பட்டு உள்ளது.