ஓவர் ஹீட்.. ஸ்க்ரீன் பிரச்சினை.. என்னா போன் இது! – அப்செட் ஆன iPhone 15 பயனாளர்கள்!
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஆப்பிள் ஐஃபோன் 15 மாடலில் ஏற்படும் கோளாறுகளால் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
சர்வதேச அளவில் மிக அதிகமான விலைக்கு லக்சரி கேட்ஜட்களை விற்று வரும் நிறுவனம் ஆப்பிள். ஆப்பிளின் ஐஃபோனுக்கு உலகம் முழுவதுமே பெரும் மார்கெட் இருந்து வருகிறது. இந்நிலையில் நீண்ட காலமாக எதிர்பார்ப்பில் இருந்து ஆப்பிளின் ஐஃபோன் 15 சிரிஸ் சமீபத்தில் வெளியானது. மக்கள் பலரும் காலையிலேயே காத்து கிடந்து லைனில் நின்று இந்த ஃபோன்களை வாங்கினர்.
ஆனால் சமீப காலமாக ஐஃபோன் 15 மாடல்களில் ஏற்படும் கோளாறுகள் அதன்மீதான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஐஃபோன் 15 சிரிஸ் மாடல்கள் ஓவர் ஹீட் ஆவதாக புகார்கள் எழுந்தது. ஒரு குறிப்பிட்ட சில ஃபோன்களில் மட்டுமே இந்த பழுது என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அடுத்த பிரச்சினை எழுந்துள்ளது.
ஓவர் ஹீட் ஆவதை தொடர்ந்து ஃபோன் டிஸ்ப்ளே பர்ன் ஆகி பச்சை, மஞ்சள் வண்ணங்களில் காட்சியளிக்கிறது. இதனால் ஐஃபோனை பயன்படுத்த முடியாமல் போவதாக புகார்கள் எழுந்துள்ளது. லட்சங்களில் கொடுத்து வாங்கிய ஃபோன் கோளாறு தரும் நிலையில் இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த ஐஃபோன் 15 சிரிஸ் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K