திங்கள், 25 செப்டம்பர் 2023
 1. செய்திகள்
 2. தகவல் தொழில்நுட்பம்
 3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 13 செப்டம்பர் 2023 (11:38 IST)

நீண்ட எதிர்பார்ப்பில் வெளியானது iPhone 15 Series! – சிறப்பம்சங்கள் மற்றும் விலை என்ன?

iPhone 15
நீண்ட காலமாக எதிர்பார்ப்பில் இருந்து வந்த ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 15 Series-ன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் வெளியாகியுள்ளது.ஆண்டுதோறும் பல நூறு ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone மாடல்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டு காலமாக நீண்ட எதிர்பார்ப்பில் இருந்த iPhone 15 Series –ன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த iPhone 15 Series மாடலானது iPhone 15, iPhone 15 Pro, iPhone 15 Pro Max, iPhone 15 Plus ஆகிய நான்கு வேரியண்டுகளில் வெளியாகியுள்ளது.

iPhone 15, iPhone 15 Pro மாடல்கள் 6.1 இன்ச் Super Retina XDR OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளன. iPhone 15 Pro Max, iPhone 15 Plus மாடல்கள் 6.7 இன்ச் Super Retina XDR OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளன.

iPhone 15 Pro, iPhone 15 Pro Max மாடல்களில் Apple A16 Bionic சிப்செட்டும், iPhone 15, iPhone 15 Plus மாடல்களில் Apple A17 Bionic சிப்செட்டும் அமைக்கப்பட்டுள்ளது.

iPhone 15 series


iPhone 15, iPhone 15 Plus மாடல்களில் இண்டெர்னல் மெமரி 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி ஆகிய மூன்று வேரியண்டுகளில் உள்ளது. iPhone 15 Pro, iPhone 15 Pro Max மாடல்களில் 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி இண்டெர்னல் மெமரி வேரியண்டுகள் உள்ளது.

கேமராவை பொறுத்த வரை iPhone 15, iPhone 15 Plus மாடல்களில் 48 எம்பி + 12 எம்பி டூவல் ப்ரைமரி கேமராவும், 12 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது.

iPhone 15 Pro, iPhone 15 Pro Max மாடல்களில் 48 எம்பி + 12 எம்பி + 12 எம்பி ப்ரைமரி ட்ரிப்பிள் கேமராவும், 12 எம்பி செல்பி கேமராவும் உள்ளது.

iPhone 15, iPhone 15 Plus மாடல்கள் Black, Blue, Green, Yellow, Pink ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றன. iPhone 15 Pro, iPhone 15 Pro Max மாடல்கள் Black Titanium, White Titanium, Blue Titanium, Natural Titanium ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றது. முதன்முறையாக ஐஃபோன் இந்த மாடல் மூலமாக Type-C சார்ஜிங் பாயிண்டில் வெளியாகிறது.

iPhone 15 plus


iPhone Series விலைப்பட்டியல்:

iPhone 15:
 • 128 GB – Rs.79,900
 • 256 GB – Rs.89,999
 • 512 GB – Rs.1,09,900

iPhone 15 Plus:
 • 128 GB – Rs.89,900
 • 256 GB – Rs.99,999
 • 512 GB – Rs.1,19,900
 
iPhone 15 Pro:
 • 128 GB – Rs.1,34,900
 • 256 GB – Rs.1,44,900
 • 512 GB – Rs.1,64,900
 • 1 TB – Rs.1,84,900

iPhone 15 Pro Max:
 • 256 GB – Rs.1,59,900
 • 512 GB – Rs.1,79,900
 • 1 TB – Rs.1,99,900
 
Edit by Prasanth.K