திங்கள், 26 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2023 (08:04 IST)

ஐபோன் 15 சீரிஸ் வெளியாகும் தேதி அறிவிப்பு.. அதே நாளில் ஆப்பிள் வாட்ச் 9 சீரீஸ் அறிமுகம்..!

iphone 15
ஐபோன் சீரிஸ் 14 கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி போன் 15 சீரிஸ் போன்கள் வெளியாகும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.  
 
செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் ஆப்பிள் நிகழ்ச்சியில் இந்த ஐபோனை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் ஆப்பிள் வாட்ச் 9 சீரிஸ் உள்ளிட்ட சில உபகரணங்களும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஐபோன் 15 சீரிஸ் என்பது ஐபோன் 14 சீரிஸின் அடுத்த தலைமுறையாக இருக்கும் ஐபோன் ஸ்மார்ட்போன்களின் வரிசையாகும். இந்த சீரிஸ்-இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சில மாடல்கள்:”
 
* ஐபோன் 15
* ஐபோன் 15 பிளஸ்
* ஐபோன் 15 ப்ரோ
* ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்
 
ஐபோன் 15 சீரிஸ் முந்தைய ஐபோன் மாடல்களை விட மேம்பட்ட கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை 48MP முக்கிய கேமரா மற்றும் 12MP அல்ட்ரா வைட் மற்றும் டெலிஃபோட்டோ கேமராக்களைக் கொண்டிருக்கும். அவை மேம்பட்ட செயல்திறன் கொண்ட A16 Bionic சிப்ஸையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் 15 சீரிஸின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் அவை ஐபோன் 14 சீரிஸின் விலைகளுக்கு இணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva