1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2023 (15:38 IST)

Leica தொழில்நுட்ப கேமராவுடன்.. Xiaomi 13T Series! – விலை எவ்வளவு தெரியுமா?

Xiaomi 13T Series
பிரபல ஷாவ்மி நிறுவனம் அதிநவீன உயர்ரக லெய்கா கேமராவுடன் கூடிய Xiaomi 13T Series அறிமுகப்படுத்தியுள்ளது.



5ஜி ஸ்மார்ட்போன்களின் தேவையும், விற்பனையும் அதிகரித்துள்ள நிலையில் பல முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பிரபலமான ஷாவ்மி நிறுவனம் Xiaomi 13T Series ஐ தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் Xiaomi 13T மற்றும் Xiaomi 13T Pro ஆகிய இரண்டு மாடல்கள் வெளியாகியுள்ளது.

Xiaomi 13T 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்
 
  • 6.67 இன்ச் அமொலெட் டிஸ்ப்ளே
  • டைமென்சிட்டி 8200 அல்ட்ரா சிப்செட்
  • 50 MP (OIS) + 50 MP + 12 MP ட்ரிப்பிள் கேமரா
  • 20 MP செல்பி கேமரா
  • 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • ஆண்ட்ராய்டு 13, MIUI 14
  • 5000 mAh பேட்டரி, 67 W பாஸ்ட் சார்ஜிங்
 
Xiaomi 13T


Xiaomi 13T 5G Pro ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்
 
  • 6.67 இன்ச் அமொலெட் டிஸ்ப்ளே
  • டைமென்சிட்டி 9200+ அல்ட்ரா சிப்செட்
  • 50 MP (OIS) + 50 MP + 12 MP ட்ரிப்பிள் கேமரா
  • 20 MP செல்பி கேமரா
  • 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • ஆண்ட்ராய்டு 13, MIUI 14
  • 5000 mAh பேட்டரி, 120 W பாஸ்ட் சார்ஜிங்
 
இதில் Xiaomi 13T 5G ஸ்மார்ட்போன் விலை ரூ.56,990 மற்றும் Xiaomi 13T 5G Pro ஸ்மார்ட்போன் விலை ரூ.69,999 ஆகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K