ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2024 (09:35 IST)

லுக்கே அள்ளுதே.. 108 MP கேமரா.. ப்ளூடூத் ஸ்பீக்கர் இலவசம்! – அறிமுகமாகிறது Tecno Pova 6 Pro 5G!

Techno Pova 6 Pro 5G
இந்திய ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் பட்ஜெட் விலையில் பல சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது Tecno Pova 6 Pro 5G.



இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ஏக கிராக்கி உள்ள நிலையில் பட்ஜெட் விலையில் சிறப்பம்சங்களுடன் கூடிய 5ஜி ஸ்மார்ட்போன்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெறுகிறது. அந்த வகையில் மக்களை கவரும் பல சிறப்பம்சங்களுடன் தனது புதிய Tecno Pova 6 Pro 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது டெக்னோ நிறுவனம்.

இந்த ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்கும் நிலையில் அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனுடன் ரூ.4,999 மதிப்புள்ள Techno S2 ப்ளூடூத் ஸ்பீக்கர் இலவசமாக வழங்கப்படுகிறது.

Tecno Pova 6 Pro 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
  • 6.78 இன்ச் ஃபுல் ஹெச்டி+ டிஸ்ப்ளே
  • டைனமிக் லைட் மினி எல்.இ.டி எஃபெக்ட்
  • மீடியாடெக் டைமென்சிட்டி 6080 5ஜி கேமிங் ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14, HiOS சப்போர்ட்டட்
  • 8 GB / 12 GB RAM
  • 256 GB இண்டெர்னல் மெமரி
  • 1 TB வரை சப்போர்ட் செய்யும் மெமரி கார்டு ஸ்லாட்
  • 108 MP + 2 MP + 0.08 MP ட்ரிபிள் ப்ரைமரி கேமரா
  • 32 MP முன்பக்க செல்பி கேமரா
  • 6000 mAh பேட்டரி, 70 W பாஸ்ட் சார்ஜிங், 10 W ரிவர்ஸ் சார்ஜிங்
 
இந்த Tecno Pova 6 Pro 5G ஸ்மார்ட்போன் கோமெட் க்ரீன், மெடியோரைட் க்ரே ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த Tecno Pova 6 Pro 5G மாடலின் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் ரூ.19,999 -க்கும், 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் ரூ.21,999 –க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Edit by Prasanth.K