புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (15:42 IST)

வெளியானது ஸ்டைலிஷான Vivo T2 Pro 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

Vivo T2 Pro
இந்த மாதத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றான Vivo T2 Pro 5G இந்தியாவில் வெளியாகியுள்ளது.



இந்தியாவில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் நிறுவனங்களில் விவோ நிறுவனமும் ஒன்று. சமீபத்தில் இந்தியாவில் 5ஜி அறிமுகமான நிலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக அதிநவீன 5ஜி சிறப்பம்சத்துடன் Vivo T2 Pro 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். கடந்த ஏப்ரலில் வெளியான Vivo T2 5G-ன் அப்டேட்டட் வெர்ஷன் தான் இந்த Vivo T2 Pro 5G.

Vivo T2 Pro 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 
  • 6.78 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே
  • மீடியாடெக் டைமென்சிட்டி 7200 சிப்செட்
  • ஆக்டாகோர் ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 13
  • 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 64 எம்பி + 2 எம்பி டூவல் கேமரா
  • 16 எம்பி முன்பக்க கேமரா
  • 4600 mAh பேட்டரி, 66 W ப்ளாஷ் சார்ஜ்

இந்த Vivo T2 Pro 5G ஸ்மார்ட்போனில் எக்ஸ்டெர்னல் மெமரி ஸ்லாட், எஃப் எம் ரேடியோ வசதிகள் கிடையாது. இதன் விலை ரூ.23,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K