ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (08:57 IST)

எல்லாமே செம ஸ்பீடு.. விரைவில் OnePlus Ace 2V! – சிறப்பம்சங்கள் என்ன?

Oneplus Ace 2V
ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய மாடலான OnePlus Ace 2V விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்ப்ளஸ் நிறுவனமும் ஒன்று. சமீபத்தில் ஒன்ப்ளஸ் வெளியிட்ட 11 சிரிஸ் நல்ல விற்பனையை எட்டியுள்ள நிலையில் அடுத்த மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. ஸ்னாப்ட்ராகன், மீடியாடெக் ஆகிய இரண்டு ப்ராசஸர்களையுமே தனது ஸ்மார்ட்போன்களில் ஒன்ப்ளஸ் பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Ace 2V மீடியாடெக் ப்ராசஸரைக் கொண்டுள்ளது.

OnePlus Ace 2V ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
 
  • அமோலெட் 1பி கலர்ஸ் டிஸ்ப்ளே, 1240 x 2772 பிக்சல்ஸ்,
  • மீடியாடெக் டைமென்சிட்டி 9000 சிப்செட்
  • ஆக்டாகோர் சிபியூ, மாலி G710 MC10 ஜிபியூ,
  • ஆண்ட்ராய்டு 12, கலர் ஓஎஸ் 13,
  • 12 ஜிபி/16 ஜிபி ரேம், 256 ஜிபி/512 ஜிபி இண்டர்னெல் மெமரி
  • 16 எம்.பி முன்பக்க கேமரா
  • 64 எம்பி பின்பக்க ப்ரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட், 2 எம்பி மேக்ரோ கேமரா
  • யூஎஸ்பி டைப் சி 2.0, டிஸ்ப்ளே ஆப்டிக்கல் ஃபிங்கர் சென்சார்,
  • 5000 mAh Battery, 80W ஃபாஸ்ட் சார்ஜிங்,

ப்ளாக், ப்ளூ, க்ரீன் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும் OnePlus Ace 2V ஸ்மார்ட்போன் 256GB/12GB RAM, 256GB/16GB RAM மற்றும் 512GB/16GB RAM ஆகிய மூன்று வகைகளில் விற்பனைக்கு வர உள்ளது. இதன் ஆரம்ப நிலை விலை ரூ.27,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K