செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 மார்ச் 2023 (15:46 IST)

அட்டகாசமான தரத்தில் வருகிறது Vivo V27 & Vivo V27 Pro! – சிறப்பம்சங்கள் என்ன?

Vivo series
பிரபலமான விவோ நிறுவனத்தின் புதிய அறிமுகமான Vivo V27 & Vivo V27 Pro ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அதிகமான ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டு வரும் நிறுவனங்களில் Vivo நிறுவனமும் ஒன்று. தற்போது இந்தியா முழுவதும் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய 5ஜி வசதி கொண்ட Vivo V27 & Vivo V27 Pro ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Vivo series


Vivo V27 மாடல் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
  • 120Hz 3D கர்வ்ட் டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமென்சிட்டி 7200
  • ஆக்டாகோர் சிபியூ, மாலி G610 MC4 ஜிபியூ
  • ஆண்ட்ராய்டு 13, ஃபண்டச் 13
  • 8 ஜி.பி/12 ஜி.பி ரேம், 128 ஜிபி/256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 50 எம்.பி ஆட்டோ ஃபோகஸ் வைட் ஆங்கிள் முன்பக்க கேமரா
  • பின்பக்கம் ட்ரிபிள் கேமரா. 50 எம்.பி வைட் ஆங்கிள் ப்ரைமரி, 8 எம்.பி அல்ட்ரா வைட், 2 எம்.பி மேக்ரோ கேமரா
  • யூஎஸ்பி டைப் சி போர்ட், ரேடியோ கிடையாது, வைஃபை, ஃபிங்கர் சென்சார்,
  • 4600 mAh பேட்டரி, 66W வயர் சார்ஜிங்,

மேஜிக் ப்ளூ, நோபிள் ப்ளாக் ஆகிய இரண்டு நிறங்களில் இந்த Vivo V27 மாடல் ஸ்மார்ட்போன் கிடைக்கும். 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.32,999க்கும், 12ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.36,999க்கும் மார்ச் 23ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.

Vivo series


Vivo V27 Pro மாடல் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
  • 120Hz 3D கர்வ்ட் அமொலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமென்சிட்டி 8200
  • ஆக்டாகோர் சிபியூ, மாலி G610 MC4 ஜிபியூ
  • ஆண்ட்ராய்டு 13, ஃபண்டச் 13
  • 8 ஜி.பி/12 ஜி.பி ரேம், 128 ஜிபி/256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 50 எம்.பி ஆட்டோ ஃபோகஸ் வைட் ஆங்கிள் முன்பக்க கேமரா
  • பின்பக்கம் ட்ரிபிள் கேமரா. 50 எம்.பி வைட் ஆங்கிள் ப்ரைமரி, 8 எம்.பி அல்ட்ரா வைட், 2 எம்.பி மேக்ரோ கேமரா
  • யூஎஸ்பி டைப் சி போர்ட், ரேடியோ கிடையாது, வைஃபை, ஃபிங்கர் சென்சார்,
  • 4600 mAh பேட்டரி, 66W வயர் சார்ஜிங்,

மேஜிக் ப்ளூ, நோபிள் ப்ளாக் ஆகிய இரண்டு நிறங்களில் இந்த Vivo V27 Pro மாடல் ஸ்மார்ட்போன் கிடைக்கும். 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.37,999க்கும், 12ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.42,999க்கும், 8ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.39,999க்கும் தற்போது முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K