1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (11:23 IST)

அப்படியே ஐபோன் 14 மாதிரியே! விலை செம கம்மி! – Lava Yuva 2 Pro சிறப்பம்சங்கள்!

Lava Yuva 2 Pro
இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான லாவா குறைந்த விலையில் ஐபோன் போல தோற்றமளிக்கும் புதிய Lava Yuva 2 Pro ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் மொபைல்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் நீண்ட காலமாக இருந்து வரும் நிறுவனம் லாவா. பட்டன் ஃபோன் காலத்திலிருந்து மொபைல் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் லாவா நிறுவனம் தற்போது குறைந்த விலையில் 4ஜி, 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

சமீபத்தில் லாவா அறிமுகப்படுத்திய Lava Baze 5G ஸ்மார்ட்போன் ரூ.12,000-ல் 5ஜி உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது Lava Yuva 2 Pro என்ற புதிய ஸ்மார்ட்போனை லாவா அறிமுகம் செய்துள்ளது. இதன் முன்பக்கம் மற்றும் பின்பக்க கேமரா மாடல் மற்றும் கலர் பார்ப்பதற்கு ஐபோன் 14 ப்ரோ மாதிரியே உள்ளது.

Lava Yuva 2 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
 
  • மீடியாடெக் ஹீலியோ ஜி37 ஆக்டாகோர் ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 12, 16.55 செ.மீ ஹெச்டி ப்ளஸ் நாட்ச் டிஸ்ப்ளே
  • 5 எம்.பி முன்பக்க கேமரா, 13 எம்.பி பின்பக்க ப்ரைமரி கேமரா, 2 விஜிஏ கேமராக்கள்
  • 4 ஜிபி ரேம் + 3ஜிபி எக்ஸ்டெண்ட் ரேம்,
  • 64 ஜிபி இண்டெர்னல் மெமரி (256 ஜிபி வரை மெமரிகார்ட் சப்போர்ட்)
  • 5000 mAh Battery, 10W பாஸ்ட் சார்ஜிங், டைப் சி டேட்டா கேபிள்,
  • சைட் ஃபிங்கர் சென்சார், வைஃபை, ப்ளூடூத், டார்ச் லைட்

இந்த Lava Yuva 2 Pro ஸ்மார்ட்போன் க்ளாஸ் வொயிட், க்ளாஸ் க்ரீன், க்ளாஸ் லாவண்டர் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.7,999 ஆகும்.

இந்த விலைக்கு இந்த ஸ்மார்ட்போன் சரியானது என்றாலும் இதில் 5ஜி வசதி கிடையாது 4ஜி மட்டும்தான். மேலும் கேமராவின் தரம் மிகவும் குறைவாகவும் உள்ளது. ஐபோன் 14 ப்ரோ போன்ற இதன் தோற்றத்திற்காகவும், சாதாரண பயன்பாட்டிற்காகவும், குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமானதொரு ஸ்மார்ட்போன்.

Edit by Prasanth.K