ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (17:03 IST)

அதிரடி விலை குறைப்பை அறிமுகம் செய்த ஒன்பிளஸ்!

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 9 5ஜி, ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலைகளை தற்காலிகமாக குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 

 
ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதால் இந்த விலை குறைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சில நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த விலை விவரம் பின்வருமாறு... 
 
1. ஒன்பிளஸ் 9 5ஜி 8ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.49,999-ல் இருந்து ரூ.5000 குறைக்கப்பட்டு ரூ.44,999-க்கு விற்பனை 
 
2. ஒன்பிளஸ் 9 5ஜி 12 ஜிபி வேரியண்டின் விலையும் ரூ.5000 குறைக்கப்பட்டு ரூ.49,999-க்கு விற்பனை 
 
3. ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.64,999-ல் இருந்து ரூ.5000 குறைக்கப்பட்டு ரூ.59,999-க்கு விற்பனை 
 
4. ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி 12 ஜிபி வேரியண்டின் விலை ரூ.69,999-ல் இருந்து ரூ.5000 குறைக்கப்பட்டு ரூ.64,999-க்கு விற்பனை