1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2023 (16:03 IST)

க்ளாரிட்டியான கேமரா.. ஸ்பீடான ரேம்..! அசத்தும் Moto G84 5G!

Moto g84
Motorola நிறுவனத்தின் புதிய மாடலான Moto G84 5G இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.



இந்தியாவில் நடந்து 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை போட்டியில் பட்ஜெட் விலையில் பல சிறப்பம்சங்கள் கொண்ட போன்களை வெளியிட்டு மோட்டரலா நிறுவனமும் ஸ்கோர் செய்து வருகிறது. அந்த வகையில் வரும் செப்டம்பர் 12ம் தேதி வெளியாக உள்ள Moto G84 5G எதிர்பார்ப்பில் உள்ளது.

Moto G84 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 
  • 6.55 இன்ச் pOLED டிஸ்ப்ளே, 120 Hz ரெப்ரெஷ் ரேட்
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 695 சிப்செட்
  • 2.2 GHz ஆக்டா கோர் ப்ராசஸர்
  • 12 GB RAM + 256 GB இண்டெர்னல் மெமரி
  • 50 எம்பி + 8 எம்பி டூவல் பின்பக்க கேமரா
  • 16 எம்பி முன்பக்க செல்பி கேமரா
  • 5000 mAh பேட்டரி, 33 W டர்போபவர் சார்ஜிங்
 
Moto g84


இந்த Moto G84 5G ஸ்மார்ட்போனில் மெமரி கார்டு ஸ்லாட் கிடையாது. இந்த Moto G84 5G மார்ஷ்மெலோவ் ப்ளூ – வீகன் லெதர், மிட்நைட் ப்ளூ, விவா மெஜந்தா – வீகன் லெதர் ஆகிய மூன்று வண்ணங்களில் வெளியாகிறது. இதன் விலை ரூ.18,999 என அறிமுக சலுகையாக ப்ளிப்கார்ட்டில் அறிமுகமாகிறது.

Edit by Prasanth.K