1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth.K
Last Modified: வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (13:54 IST)

லைஃப்டைம் ஸ்க்ரீன் வாரண்டி...! இந்த மாடல்களுக்கு மட்டும் நஹீ! – OnePlus அதிரடி அறிவிப்பு!

OnePlus
சமீபத்தில் ஒன்ப்ளஸ் வெளியிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களில் ஸ்க்ரீனில் கோடு விழுந்த நிலையில் அந்த மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு லைஃப்டைம் ஸ்க்ரீன் வாரண்டி அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்தியாவில் பல மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக ஒன்ப்ளஸ் நிறுவனம் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒன்ப்ளஸ் வெளியிட்ட பல ஸ்மார்ட்போன் மாடல்களில் ஸ்க்ரீனின் குறுக்கே கோடு விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. புதிய சாப்ட்வேர் அப்டேட்டுகளை பெற்றதும் இதுபோன்ற கோடுகள் விழுவதாக புகார்கள் எழுந்தது.

இந்நிலையில் இவ்வாறாக க்ரீன் ஸ்க்ரீன் பிரச்சினை ஏற்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு லைஃப்டைம் ஸ்க்ரீன் வாரண்டி வழங்குவதாக ஒன்ப்ளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் இந்த பிரச்சினை ஸ்மார்ட்போனில் எழுந்தால் இலவசமாகவே ஸ்க்ரீனை மாற்றிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சலுகை OnePlus 8 Pro, 8T, 9 மற்றும் 9R ஆகிய மாடல்களுக்கு பொருந்தாது என ஒன்ப்ளஸ் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த மாடல் ஸ்மார்ட்போன்களை OnePlus 10R மாடல்களுக்கு அப்க்ரேட் செய்து கொண்டால் ரூ.30 ஆயிரம் வரை டிஸ்கவுண்ட் வவுச்சர்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K