வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 ஜூலை 2023 (09:40 IST)

எதிர்பாராத வசதிகள்.. இந்த பட்ஜெட் விலையிலா? – கலக்கும் OnePlus Nord CE3 5G!

OnePlus Nord CE3
ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் அதிரடி வெளியீடான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட OnePlus Nord CE3 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது.



இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்ப்ளஸ் நிறுவனமும் ஒன்று. அடிக்கடி புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் தற்போது தனது புதிய OnePlus Nord CE3 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

”நீங்கள் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் கூடவே உள்ளது” என்ற டேக் லைனுடன் வெளியாகியுள்ள இந்த OnePlus Nord CE3 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்.

OnePlus Nord CE3 5G சிறப்பம்சங்கள்:
  • 6.7 இன்ச் அமோலெட் ஸ்க்ரீன்
  • 120 Hz ரெப்ரெஷ் ரேட், 240 Hz டச் சாம்ப்ளிங் ரேட்,
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 782G சிப்செட்
  • 2.7 GHz ஆக்டாகோர் பிராஸசர்
  • ஆண்ட்ராய்டு 13,
  • 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ப்ரைமரி ட்ரிபிள் OIS கேமரா
  • 16 எம்பி முன்பக்க செல்பி கேமரா
OnePlus Nord CE3 5G


  • 8 ஜிபி / 12 ஜிபி ரேம் வேரியண்ட்
  • 128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 1 டிபி வரை நீட்டிக்கக்கூடிய மெமரி கார்ட் ஸ்லாட்
  • டிஸ்ப்ளே ஃபிங்கர் சென்சார்
  • 5000 mAh பேட்டரி
  • 80W SUPERVOOC சார்ஜிங்

இந்த OnePlus Nord CE3 5G ஸ்மார்ட்போன் அக்குவா சர்ஜ், க்ரே ஷிம்மர் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. OnePlus Nord CE3 5G ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.26,999க்கும், 12 ஜிபி + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.28,999க்கும் அறிமுகமாகியுள்ளது.