திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 செப்டம்பர் 2021 (11:29 IST)

ரூ. 749 விலையில் ஆல் இன் ஒன் ரீசார்ஜ் சலுகை - ஜியோ அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 749 விலையில் ஆல் இன் ஒன் ரீசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. 

 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள ரூ. 749 சலுகை 336 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இது 28 நாட்கள் என 12 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மொத்தம் 24 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
 
இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 50 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இந்த புதிய சலுகை ஜியோபோனிற்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் நீண்ட கால வேலிடிட்டி கொண்ட சலுகையாகும்.