வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (14:31 IST)

அசுர வேகத்தில் பயனர்களை ஈர்க்கும் ஏர்டெல்: திண்டாடும் ஜியோ!

ஏர்டெல் நிறுவனம் அக்டோபர் மாதம ஜியோவை விட அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. 


 
மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், 2020 அக்டோபர் மாத அடிப்படையில் ஏர்டெல் நிறுவனம் 36.7 லட்சம் வயர்லெஸ் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. 
 
இதே காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ 14.5 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து இருக்கிறது. அக்டோபர் மாத நிலவரப்படி ஏர்டெல் நிறுவனம் சுமார் 33.02 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2020 அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 40.63 கோடியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.