வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 பிப்ரவரி 2024 (08:56 IST)

பாக்க ஐஃபோன் மாதிரியே இருக்கும்.. ஆனா பட்ஜெட் விலைதான்! – Techno Spark 20C அறிமுகம்!

Techno Spark 20C
பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்ஃபோன்களை விற்று வரும் டெக்னோ நிறுவனம் தற்போது ஐஃபோன் லுக்கில் பட்ஜெட் விலையில் Techno Spark 20C என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது.



ஆண்ட்ராய்டு ஃபோன், ஐஃபோன் இடையேயான போட்டியில் மக்களால் அதிகம் வாங்கப்படுவது ஆண்ட்ராய்டு ஃபோன்கள்தான். ஆனால் ஐஃபோனின் லுக் என்றால் பலருக்கும் விருப்பம். சில ஆண்ட்ராய்டு ஃபோன்களே ஐஃபோன் லுக்கில் ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதும் உண்டு. அப்படியாக புதிய Techno Spark 20C வெளியாகியுள்ளது.

Techno Spark 20C ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
  • 6.6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
  • மீடியாடெக் ஹெலியோ ஜி36 சிப்செட்
  • ஆக்டாகோர் 2.2 GHz ப்ராசஸர்
  • பவர் வி ஆர் GE8320 கிராபிக்ஸ்
  • ஆண்ட்ராய்டு 13, HiOS
  • 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 1 டிபி வரை சப்போர்ட் செய்யும் மெமரி கார்டு ஸ்லாட்
  • 50 எம்பி + 0.08 எம்பி டூவல் ப்ரைமரி கேமரா
  • 8 எம்பி முன்பக்க செல்பி கேமரா
  • 5000 mAh பேட்டரி, 18 W பாஸ்ட் சார்ஜிங்
 
இந்த Techno Spark 20C ஸ்மார்ட்போன் 4ஜி அலைவரிசை வரை மட்டுமே சப்போர்ட் செய்யும். இந்த Techno Spark 20C மாடல் க்ராவிட்டி ப்ளாக், மிஸ்டரி வொயிட், அல்பெங்ளோவ் கோல்டு மற்றும் மேஜிக் ஸ்கின் க்ரீன் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.8,999 ஆகும். சலுகை விற்பனையில் ரூ.1000 தள்ளுபடி போக ரூ.7,999க்கு கிடைக்கும்.

Edit by Prasanth.K