திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 ஜூன் 2022 (12:39 IST)

நாய்க்குட்டிக்கும் விமான டிக்கெட் கேட்டீங்களாம்! – ராஷ்மிகா சொன்ன அந்த பதில்!

Rashmika Mandanna
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தனது செல்ல நாய்க்குட்டிக்கும் விமானத்தில் டிக்கெட் எடுக்க சொல்வதாக கூறப்படுவது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் மூலம் புகழ்பெற்ற இவர் புஷ்பா வரை பல படங்களில் நடித்துள்ளார். வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை ஷேர் செய்யும் ராஷ்மிகா தனது செல்ல நாய்க்குட்டி ஆராவுடன் உள்ள புகைப்படங்களையும் பதிவிடுவார். சமீப காலமாக படப்பிடிப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் ராஷ்மிகா தனது நாய்க்குட்டிக்கும் விமானத்தில் தனி டிக்கெட் போட்டு தருமாறு தயாரிப்பாளர்களை சங்கடப்படுத்துவதாக ஒரு தகவல் வலைதளங்களில் பரவி வந்தது.

இதுகுறித்த ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சிரிக்கும் எமோஜிகளை அள்ளி தெளித்து பதிலளித்துள்ள ராஷ்மிகா “உண்மையாகவா? அந்த தகவல்களை எல்லாம் எனக்கு அனுப்புங்கள். என் அன்பு செல்வங்கள் இதில் சிக்குவதை கண்டு ஆச்சர்யமாக உள்ளது. எனது நாய்க்குட்டி என்னுடன் பயணம் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும்.. அது விரும்பாது. அது ஹைதராபாத்தில் எங்கள் வீட்டில் இருக்கதான் விரும்பும்” எனக் கூறியுள்ளார்.