புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (10:48 IST)

பிக்ஸட் டெபாசிட்களை அறிமுகப்படுத்தும் கூகுள் பே!

ஆன்லைன் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் ஒரு யுபிஐ செயலியாக கூகுள் பே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டு யுபிஐ செயலிகளில் கூகுள் பே யும் ஒன்று. இந்நிலையில் இப்போது வங்கிகளில் இருப்பது போல கூகுள் பே நிறுவனம் வாடிக்கையாளர் வைப்பு நிதியை அறிமுகப்படுத்த உள்ளது.

தொடக்கத்தில் ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்கின் திட்டங்களை மட்டும் அளிக்கிறது. ஒரு ஆண்டுக்கான அதிகபட்ச வட்டியாக 6.35 சதவீதத்தைக் கொடுக்கிறது. ஒரு ஆண்டு, 6 மாதம், 4 மாதம், 3 மாதம் மற்றும் ஒரு மாதம் என பல காலக்கட்டங்களுக்கான வைப்பு நிதி திட்டத்தை அறிவித்துள்ளது.