1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (13:45 IST)

இந்தியாவில் ஐபோன் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு!

iPhone 14
இந்தியாவில் ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு 5ஜி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 5ஜி சேவை தொடங்கியது என்பதும் ஆனாலும் இந்த சேவையை பயன்படுத்த ஐபோன் பயனாளிகளுக்கு வசதி இல்லாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்தியாவில் பயன்படுத்தும் ஆப்பிள்  ஐ போன் பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இனிமேல் இந்தியாவில் உள்ள ஐபோன் பயனர்கள் தங்களது மொபைலில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் ஆப்பிள் நிறுவனம் புதிய சாப்ட்வேர் ஒன்றை வெளியிட்டது.
 
ஏர்டெல் ஜியோ உள்பட அனைத்து பயனர்களும் இனி தங்களது ஐபோனில் இந்த 5ஜி சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து 5ஜி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிப்பு உள்ளது. இந்த அறிவிப்பு இந்தியாவில் ஐபோன் பயனாளிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran