ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 14 டிசம்பர் 2022 (07:52 IST)

இன்று இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடர் தொடக்கம்.. வெற்றி யாருக்கு?

India Test
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளதை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர். 
 
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றாலும் மூன்றாவது போட்டியில் இந்தியா 200 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
இதனை அடுத்து இன்று இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஆரம்பமாக உள்ளது. இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாக இருக்கும் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பலர் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக விராட்கோலி, ரிஷப் பண்ட், அஸ்வின் உள்ளிட்டோர் இந்திய அணிக்காக விளையாட உள்ளனர். டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை இந்திய அணி வலுவான அணியாக இருப்பதால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva