1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By Sinoj
Last Modified: சனி, 1 மே 2021 (22:19 IST)

ஐபில்-2021; மும்பை அணிக்கு 219 ரன்கள் வெற்றி இலக்கு..

ஐபிஎல் தொடரின் இரு பெரும் ஜாம்பவான் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் கொண்டவை என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில், டூபிளஸிஸ் 50 ரன்களும், கொயீன் அலி 58 ரன்களும், எடுத்தனர். ரெய்னா 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.
 
பின்னர், அம்பதி ராயுடு 27 பந்துகளில் 72 ரன்கள் அடித்து தாண்டவம் ஆடினார். ஜடேஜா 22 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை அணி  20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்து மும்பைக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.