வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 1 மே 2021 (21:47 IST)

தடுப்பூசி போடும் முன்பு விஜய் ரசிகர்களின் செயல்...குவியும் பாராட்டுகள்

விஜய் ரசிகர்கள் தடுப்பூசி போடும் முன்பு  இன்று  ரத்ததானம் செய்துள்ளனர்.

இந்தியாவில் கொரொனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவருகிறது. எனவே 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்கூட்டியே ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு தொடங்கும் நிலையில் அரசின் www.cowin.gov.in என்ற தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூச் போட்டுக்கொள்ளும் முன்பு விஜய் ரசிகர்கள் ரத்ததானம் செய்துள்ள சம்பவம் சமூக வலைதளத்தில் எல்லோராலும் பாராட்டப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது பிறந்தநாள் வரும் ஜூன் 22 ஆம் தேதிதான். அப்போது ஒவ்வொரு வருடமும் விஜய் ரசிகர்கள் ரத்ததானம் செய்வார்கள்.

ஆனால், இப்பெருந்தொற்றுக் காலத்தில்தடுப்பூசி போட்டுக்கொண்டால் சுமர் 70 நாட்களுக்கு ரத்ததானம் செய்யக்கூடாது என்பதால் விஜய் ரசிகர்கள் தடுப்பூசி போடும் முன்பு  இன்று  ரத்ததானம் செய்துள்ளனர்.

மேலும், விஜய் ரசிகர்கள் சமீபத்தில் கொரொனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஆக்ஸின சிலிண்டர்கள் இலவசமாகக் கொடுத்து உதவியுள்ளனர்.