புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 1 மே 2021 (20:28 IST)

இந்தியா வந்தடைந்த ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிகள்!

ரஷ்யாவின் தடுப்பூசியான ஸ்புட்னிக் வி இந்தியா வந்து சேர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இவை தவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரிக்க டாக்டர் ரெட்டிஸ் லேப் அனுமதி பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல் கட்டமாக 1,25 கோடி தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன. இந்த ஊசிகளின் பயன்பாடுகள் மே முதல் வாரத்தில் இருந்தே வரும் என சொல்லப்படுகிறது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அனுமதிக்கும் 60 ஆவது நாடு இந்தியா ஆகும். இந்நிலையில் இன்று ஸ்புட்னிக் ஊசிகள் இந்தியா வந்து சேர்ந்துள்ளன. விரைவில் இவை பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது.