அஜித் பட நடிகரின் பான் இந்தியா படம்...பிரமாண்ட பட்ஜெட்...எகிரும் எதிர்ப்பார்ப்பு
சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபாஸ் -ராணா ஆகிய இருவரின் நடிப்பில் ராஜமெளலி நடிப்பில் வெளியான படம் பாகுபலி1,2. இப்படங்களில் வெற்றியால் இந்தியா முழுவதும் பிரபாஸ் மற்றும் ராணாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது.
அதன்பின்னர் இருவரும் தங்களில் படங்களில் பட்ஜெட் மற்றும் சம்பளத்தை முன்னணி நடிகர்களுக்கு இணையாகப் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், ஏற்கனவே பிரபாஸின் படங்கள் அனைத்தும் பான் இந்தியா படங்களாக வெளிவரும் நிலையில், ராணாவின் படங்களும் இதேபோல் பான் இந்தியா படமாக வெளியிடத்திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் ராணா அஜித்துடன் ஆரம்பம் படத்திலும் நடித்துள்ளார். இவர் தமிழில் கடையாக நடித்த படம் காடன். இப்படமும் பான் இந்தியா படமாக தமிழ் , தெலுங்கு, இந்திய உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.
இந்நிலையில் தற்போது ராணா மலையாளத்தில் பிரித்விராஜ் ந்டிப்பில் வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் பட ரீமேக்கில் நடிக்கிறார். மேலும் தற்போது அவர் விரதபர்வம் என்ற படத்தில் பிரியாமணி, சாய் பல்லவி ஆகியோருடன் நடித்து வருகிறார். இவ்விரு படங்களும் பான் இந்திய படங்களாக ரிலீஸா ஆகும் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கோபிநாத் அச்சம்மா, ராம்பாபுவுடன் இணைந்து ஒரு படத்தை ராணா தயாரிக்கவுள்ளார். இப்படமும் பான் இந்தியா படமாக வெளிவரும் எனத் தெரிகிறது.