திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 1 மே 2021 (20:28 IST)

சட்டையைக் கழட்டிவிட்டு கெய்லுடன் போஸ் கொடுத்த பெங்களூர் வீரர்!

பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிந்தபின்னர் கெய்ல் மற்றும் சஹால் இருவரும் சட்டையின்றி போஸ் கொடுத்துள்ளனர்.

கெய்ல் பெங்களூர் அணிக்காக பல வெற்றிகளைக் குவித்தவர். ஆனால் ஒரு கட்டத்தில் அவரைக் கழட்டிவிட்டது பெங்களூர் அணி. அதன்பின்னர் அவர் பஞ்சாப் அணியால் மிகக்குறைந்த தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று கெய்லின் பழைய அணியான ஆர் சி பி யோடு பஞ்சாப் அணி மோதி வெற்றி பெற்றது.

அந்த போட்டிக்கு பின்னர் ஆஜானுபாகுவான உடலமைப்பு உள்ள கெய்லுடன் சட்டையின்றி போஸ் கொடுத்துள்ளார் சஹால். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.