1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
  4. Corona to another player in Chennai Kings

சென்னை கிங்ஸ் அணியில் மற்றொரு வீரருக்கு கொரொனா !

n Chennai Kings
ஐபிஎல்-2021 கிரிக்கெட் திருவிழா இந்த ஆண்டு சிறப்பாகத் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுத் தங்கள் திறமையை நிரூபித்துக் கொண்டுள்ள நிலையில், சூப்பர் லீக் முடியும் முன்னமே சென்னை கிங்ஸ், ஹைதராபாத் அணி வீரர்களுக்குக் கொரொனா தொற்று உறுதியானது.

ஏற்கனவே இந்தியாவில், கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்படுவதாக பிசிசிஐ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் பிசிசிஐக்கு ரூ.2000 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மற்றொரு சென்னை அணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது.

இன்று சென்னை கிங்ஸ் அணியின்  பந்துவீச்சாளர் பாலஜிக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல்   சென்னை அணியின்பயிற்சியாளர் மை ஹசிக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி தொடங்குவது எப்போது? ஐபிஎல் சேர்மன் தகவல்!