திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By
Last Updated : சனி, 1 மே 2021 (20:21 IST)

சி எஸ் கே சிறப்பான தொடக்கம்… விக்கெட் தேடும் மும்பை பவுலர்கள்!

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்து சிறப்பான தொடக்கம் அமைத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இரு பெரும் ஜாம்பவான் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் கொண்டவை என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். அதன் பிறகு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துள்ளனர். தற்போது வரை 8.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் சேர்த்துள்ளது.  ருத்துராஜ் கெய்க்வாட் 4 ரன்களில் அவுட் ஆனாலும், அதன் பிறகு வந்த மொயின் அலியோடு ஜோடி சேர்ந்த டு பிளஸிஸ் விக்கெட் விழாமல் அணியை சரிவில் இருந்து காப்பாற்றினார். டூ பிளஸ்சி 22 ரன்களும் மொயின் அலி 44 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.