ஐபிஎல் 2020 முதல் போட்டியே MI vs CSK: கிரிக்கெட் பிரியர்கள் உற்சாகம்!!

Sugapriya Prakash| Last Modified சனி, 19 செப்டம்பர் 2020 (07:59 IST)
கொரோனாவுக்குப் பிந்தையை மிகப்பெரிய கிரிக்கெட் சுற்றுலாவாக ஐபிஎல் இன்று முதல் துவங்குகிறது. 
 
ஐபிஎல் தொடரின் இரு ஜாம்பவான் அணிகளாக கருதப்படும் சென்னை மற்றும் மும்பை அணிகளின் போட்டியுடன் முதல் நாள் ஐபிஎல் துவங்குகிறது. கொரோனா காரணத்தால் பல மாதங்கள் தள்ளிப்போய் அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. 
 
கொரோனாவுக்குப் பிந்தையை மிகப்பெரிய கிரிக்கெட் சுற்றுலாவாக ஐபிஎல் பார்க்கப்படுகிறது. முதல் போட்டியாக கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட மும்பை மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளன. 
 
ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்த வரை சென்னை மும்பை போட்டிகள் என்றால் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு நிகரானது. இதுவரை நடந்த 12 சீசன்களிலும் சென்னை மற்றும் மும்பை அணிகள் நேருக்கு நேர் 30 முறை மோதியுள்ளன. மும்பை 18 முறையும், சென்னை அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 

 
எனவே ரசிகர்கள் மத்தியிலும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனவே சமுக வலைத்தளமான டிவிட்டரில் #MIvCSK, #ipl2020 மற்றும் #WhistlePodu ஆகிய ஹேஷ்டேக்குகள் காலை முதலே டிரெண்டாக்கப்பட்டு வருகின்றன. இன்று மாலை 7.30 மணிக்கு போட்டிகள் துவங்கவுள்ளது குறிப்பிட்த்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :