செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By
Last Modified: புதன், 7 மார்ச் 2018 (16:11 IST)

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கேப்டனாக கவுதம் கம்பீர் தேர்வு

வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ள 11-வது ஐபில் தொடரில் டெல்லி அணியின் புதிய கேப்டனாக கவுதம் காம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
2018ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. 2011ஆம் ஆண்டில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வந்த கம்பீரை கொல்கத்தா தக்கவைத்துக் கொள்ளவில்லை. இதனால் தன்னை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுக்க வேண்டாம் என கம்பீர் கூறிவிட்டார்.
 
இதனால் டெல்லி அணி கம்பீரை ரூ.2.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 2012 மற்றும் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டி தொடரில் கொல்கத்தா அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்தவர் கம்பீர். 
 
இந்நிலையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம் கவுதம் கம்பீரை புதிய கேப்டனாக நியமித்துள்ளது. இவர் ஏற்கனவே டெல்லி அணிக்காக 3-ஆண்டுகள் விளையாடியது குறிப்பிடத்தக்கது.