மக்கள் மனது புண்படும்படி பேசுவது தவறுதான் – எம் எல் ஏ கருணாஸ் பேட்டி!

Last Updated: செவ்வாய், 27 அக்டோபர் 2020 (16:43 IST)

மனுநீதி விவகாரம் தொடர்பாக அதிமுக எம் எல் ஏ கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மனுதர்மத்தில் பெண்கள் குறித்து இழிவாக சொல்லப்பட்டுள்ளதாக சில பகுதிகளை மேற்கோள் காட்டி விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அந்த வீடியோவை சிலர் எடிட் செய்து தான் பெண்கள் பற்றி திருமா வளவன் இந்து பெண்களை தவறாகப் பேசியுள்ளதாக குற்றம் சாட்டினார். இது சம்மந்தமாக சமூகவலைதளங்களில் ஊடகங்களிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த எம் எல் ஏ கருணாஸ் ‘மனுநீதி குறித்து யாராக இருந்தாலும் மக்கள் மனது புண்படும்படி பேசினால் தவறுதான்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :