இந்தி திரைப்படங்களில் கிடைக்காத வாய்ப்பு – ஸ்ருதி ஹாசன் மழுப்பல் பதில்!

Last Modified செவ்வாய், 27 அக்டோபர் 2020 (17:31 IST)

நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் அறிமுகமானது லக் எனும் இந்தி திரைப்படத்தில்தான்.

கமலின் மகளான ஸ்ருதி ஹாசன் ஏழாம் அறிவு படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் லக் எனும் இந்தி படத்தில் நடித்தார். இதனால் தொடர்ந்து இந்தி படங்களில் வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். இப்போது தமிழில் லாபம் மற்றும் தெலுங்கில் கிராக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்பு வராதது குறித்து அவரிடம் கேட்ட போது ‘நான் இல்லாததால் நீங்கள் என்ன ஏமாற்றம் அடைந்து விட்டீர்களா என்ன…?’ என பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :