செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By
Last Updated : புதன், 4 நவம்பர் 2020 (10:01 IST)

திடீரென மும்பை இந்தியன்ஸ் டீமில் இறங்கிய ரோஹித்… காயம் குறித்து தொடரும் மர்மம்!

காயம் காரணமாக சில ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா நேற்றைய போட்டியில் களமிறங்கினார்.

நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது. இதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயமே என சொலல்ப்பட்டது.

இப்போது அவரது உடல்நிலையை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது. இந்நிலையில் திடீரென்று நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மா களமிறங்கினார். இதனால் அவரின் காயம் குறித்த வெளிப்படை தன்மை ஒன்றும் தெரியவில்லை.  காயம் சரியாகிதான் அவர் விளையாடுகிறார் என்றால் ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறுவாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.