புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 4 நவம்பர் 2020 (09:59 IST)

அர்னாப் கோஸ்வாமி திடீர் கைது! வீட்டுக்கு சென்று இழுத்து சென்ற போலிஸார்!

ரிபப்ளிக் சேனல் எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி 2018 ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டிட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் 2018-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டனர். அவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த வழக்கின் விசாரணைக்காக இப்போது மும்பை போலிஸார் அர்னாப்பை கைது செய்துள்ளனர்.

அவரது வீட்டுக்கு சென்று அவரை தரதரவென்று இழுத்து சென்றதாகவும், கைது செய்வதற்கு முன்னர் அவரை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.