ஐபிஎல் தொடரில் கடைசி இடத்தில் ராஜஸ்தான்… இதுவரை இல்லாத சாதனை!
ஐபிஎல் 2020 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிந்துள்ளன.
கொரோனா காரணமாக 5 மாதங்கள் தாமதமாக தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடந்து வருகின்றன. இதில் லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மும்பை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ளன.
இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஆனாலும் அந்த அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை எந்த ஆண்டும் கடைசி இடத்தில் இருக்கும் அணி 6 வெற்றிகளைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த அணிகள்
2008: 4 புள்ளிகள் (ஹைதராபாத்)
2009: 7 புள்ளிகள் (கொல்கத்தா)
2010: 8 புள்ளிகள் (பஞ்சாப்)
2011: 9 புள்ளிகள் (தில்லி, புணே) (10 அணிகள், 14 ஆட்டங்கள்)
2012: 8 புள்ளிகள் (புணே) (9 அணிகள், 16 ஆட்டங்கள்)
2013: 6 புள்ளிகள் (தில்லி) (9 அணிகள், 16 ஆட்டங்கள்)
2014: 4 புள்ளிகள் (தில்லி)
2015: 6 புள்ளிகள் (பஞ்சாப்)
2016: 8 புள்ளிகள் (பஞ்சாப்)
2017: 7 புள்ளிகள் (ஆர்சிபி)
2018: 10 புள்ளிகள் (தில்லி)
2019: 11 புள்ளிகள் (ஆர்சிபி, ராஜஸ்தான்)
2020: 12 புள்ளிகள் (ராஜஸ்தான், சென்னை, பஞ்சாப்)