செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 நவம்பர் 2020 (10:38 IST)

ஆறு தொடர்களில் 500க்கும் மேல் ரன் குவிப்பு! – வார்னரின் புதிய சாதனை!

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி வென்று ப்ளே ஆஃப் சென்ற நிலையில் அதன் கேப்டன் டேவிட் வார்னர் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

நேற்றைய ஐபிஎல் போட்டியின் கடைசி போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்ட டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடி 17 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து மும்பை அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 3வது இடத்தில் இருந்த ஆர்சிபியை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தை பிடித்தது சன் ரைஸர்ஸ். இதனால் நான்காவது இடத்தில் இருந்த நைட் ரைடர்ஸ் அணி பட்டியலில் சரிந்து ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் அரைசதம் அடித்த கையோடு இந்த சீசனில் இதுவரை 529 ரன்கள் பெற்றுள்ளார் டேவிட் வார்னர். கடந்த 2014 முதல் இந்த ஆண்டு வரை தொடர்ந்து 6 ஐபிஎல் தொடர்களிலும் 500க்கும் மேல் அடித்துள்ளதாக ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார் வார்னர். இதில் கடந்த 2016ம் ஆண்டு தொடரில் அதிகபட்சமாக 818 ரன்களை வார்னர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.